அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி ராஜினாமாவைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை கூடுதலாக ஒதுக்கீடு


அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி ராஜினாமாவைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை கூடுதலாக ஒதுக்கீடு
x
தினத்தந்தி 7 Jan 2019 4:36 PM GMT (Updated: 7 Jan 2019 4:36 PM GMT)

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி ராஜினாமாவைத் தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது

சென்னை,

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி ராஜினாமா செய்ததைத் அடுத்து, அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது

முன்னதாக தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, கடந்த 1998ம் ஆண்டு பேருந்து ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.  அதன்பின் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள வழக்குகளை விசாரணை மேற்கொள்ளும் சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய கூடும் என கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல் அமைச்சர் பழனிசாமியை பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  இந்த சந்திப்பிற்கு பின் தமிழக அமைச்சர் பதவியில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆளுநருக்கு  அனுப்பிய ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது.

இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்முலம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையை கூடுதலாக அவர் கவனிப்பார்.

Next Story