மாநில செய்திகள்

பனி, புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிப்பு + "||" + Fog disrupts flights at chennai airport

பனி, புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிப்பு

பனி, புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிப்பு
கடுமையான பனி மற்றும் புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை இன்று காலை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

சென்னையில் கடந்த சில வாரங்களாகவே அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இந்த நிலையில், இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுவதால், மக்கள் வீடுகளில் இருந்த பழைய பொருட்களை தீயில் போட்டு எரித்தனர். இதனால், இன்று காலை பனியுடன் புகையும் சேர்ந்து கடும் பனிமூட்டம் மற்றும் புகை மூட்டமாக காணப்பட்டது. 

இதன் காரணமாக  சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களுர், புனே, திருச்சி, மும்பை, அந்தமானில் இருந்து வந்து செல்லும் விமானங்கள் 2 மணி நேரம் வரை தாமதம் ஆகியுள்ளன. சென்னை - பெங்களூரு, சென்னை - மும்பை செல்லவிருந்த  ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.  இதனால்,  பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.