மாநில செய்திகள்

2019 பாராளுமன்ற தேர்தல்: அதிமுகவில் குழுக்கள் அமைப்பு + "||" + 2019 parliamentary election Groups at AIADMK system

2019 பாராளுமன்ற தேர்தல்: அதிமுகவில் குழுக்கள் அமைப்பு

2019 பாராளுமன்ற தேர்தல்: அதிமுகவில் குழுக்கள்  அமைப்பு
அதிமுக சார்பில் மக்களவை தேர்தல் குறித்து பேச்சு வார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்க, பிரசார குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை,

வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் அதிமுக சார்பில் தனித்தனியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு குறித்து  பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி., செய்தி தொடர்பாளர்  கேசிடி பிரபாகர், அமைச்சர்கள் தங்க மணி, வேலுமணி ஆகியோர்  பேச்சுவார்த்தை  குழுவில் இடம் பெற்று உள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில்  பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள்  ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை. மனோஜ் பாண்டியன், பெர்னாட் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முறைப்படுத்த தம்பிதுரை உள்ளிட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன்,  வளர்மதி, கோகுல இந்திரா, வைகை செல்வன், வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 2019 பாராளுமன்ற தேர்தல்: மாயாவதி -அகிலேஷ் யாதவிடையே தொகுதி உடன்பாடு நாளை கூட்டாக அறிவிப்பு
2019 பாராளுமன்ற தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி -அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட்டு உள்ளது. நாளை இருவரும் கூட்டாக அறிவிக்கிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...