தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்


தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்
x
தினத்தந்தி 12 Feb 2019 8:05 AM GMT (Updated: 12 Feb 2019 8:05 AM GMT)

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

சென்னை.

நேற்றைய தமிழக சட்டசபை கூட்டத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வறுமை கோட்டிற்கு கீழுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என கூறினார்.

இன்று பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் நடைபெற்றது.   திமுக எம்எல்ஏ பொன்முடி இந்த 2000 ரூபாய் சிறப்பு நிதி தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் அறிவித்ததில் திமுகவிற்கு மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் ஏன் இந்த அறிவிப்பு பட்ஜெட் அறிவிப்பில் வரவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, இது எந்த கட்சிக்குமான அறிவிப்பு அல்ல, அனைத்து மக்களுக்குமான திட்டம் என கூறினார்.

மேலும் அமைச்சர் தங்கமணி பேசுகையில்,  வறட்சி காரணமாகத்தான் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்புநிதி வழங்கப்படுகிறது என கூறினார். 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறும் போது,

"உழைப்பாளர்கள், தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிதி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததில் எந்த தவறும் கிடையாது. 110-விதியின் கீழ் அறிவிக்க முதலமைச்சருக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. ரூ.2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல, வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் பயன் அடைவதற்காக தான்" என கூறினார்.

Next Story