மெட்ரோ ரெயிலில் 4வது நாளாக நாளையும் இலவச பயணம்


மெட்ரோ ரெயிலில் 4வது நாளாக நாளையும் இலவச பயணம்
x
தினத்தந்தி 12 Feb 2019 4:11 PM GMT (Updated: 12 Feb 2019 4:11 PM GMT)

மெட்ரோ ரெயிலில் 4வது நாளாக நாளையும் இலவச பயணம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஞாயிற்று கிழமை திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த வழித்தடத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை, மண்ணடி, ஐகோர்ட்டு, சென்டிரல் மெட்ரோ 2-வது தளம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு ஆகிய ரெயில் நிலையங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

மெட்ரோ ரெயில் சேவையை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக சென்னையின் அனைத்து வழித்தடத்திலும் மெட்ரோ ரெயிலில் நேற்று இலவசமாக பயணம் செய்யலாம் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்தது.  இதேபோன்று இன்றும் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மெட்ரோ ரெயிலில் 4வது நாளாக நாளையும் இலவச பயணம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  இதனால் நாளை இரவு வரை மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் மேற்கொள்ளலாம்.  இந்த சலுகையை மெட்ரோ ரெயில்வே அறிவித்துள்ளது.

எனினும், மின்கம்பம் பழுது காரணமாக நேற்று ரெயில்கள் சில வழித்தடங்களில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர்.  அதன்பின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு மெட்ரோ ரெயில் போக்குவரத்து சீரடைந்தது.

Next Story