விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன் - ராமதாஸ்
உடல்நலம் குறித்து விசாரிக்கவே விஜயகாந்தை சந்தித்தேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை சந்தித்து பேசினார். ராமதாஸ் உடன் அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி உள்ளிட்டோரும் விஜயகாந்தை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன்” என்றார்.
Related Tags :
Next Story