தொண்டர்களின் விருப்பம் காரணமாக தேர்தலில் போட்டியிட ஜெ. தீபா முடிவு
தொண்டர்களின் விருப்பம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னைஇ
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் ஜெ. தீபா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தொண்டர்களின் விருப்பம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். தேர்தலில் போட்டியிட இதற்கான விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறினார். 3 மாதங்களுக்கு முன்பு அதிமுகவுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்திருந்தோம். சரியான முடிவு எட்டப்படாததால் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story