நாடாளுமன்றத்துக்கு போட்டியிடும் அ.தி.மு.க-தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் ஒரே நாளில் 2 கட்சிகளும் வெளியிட்டதால் பரபரப்பு


நாடாளுமன்றத்துக்கு போட்டியிடும் அ.தி.மு.க-தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் ஒரே நாளில் 2 கட்சிகளும் வெளியிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 March 2019 5:45 AM IST (Updated: 18 March 2019 9:54 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தலா 20 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேற்று தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன. இரு கட்சிகளும் ஒரே நாளில் பட்டியலை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2-வது கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கும் அன்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினம் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதனால் தேர்தல் களைகட்ட தொடங்கி இருக்கிறது.

இந்த தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், எதிர்க்கட்சியான தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

அ.தி.மு.க. கூட்டணியில் அந்த கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதேபோல் தி.மு.க. கூட்டணியில் அந்த கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதிகளின் பட்டியல் நேற்று காலை வெளியிடப்பட்டது.

அதன்பிறகு நேற்று மாலை வேட்பாளர்கள் தேர்வு குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

பல மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு அவர்கள் இருவரும் கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியல் இரவு 10 மணி அளவில் வெளியிடப்பட்டது.

தொகுதி வாரியாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

திருவள்ளூர் (தனி) - டாக்டர் பி.வேணுகோபால்.

தென்சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்தன்

காஞ்சீபுரம் (தனி) - மரகதம் குமரவேல்

கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி

திருவண்ணாமலை - அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ஆரணி - செஞ்சி வெ.ஏழுமலை

சேலம் - கே.ஆர்.எஸ். சரவணன்

நாமக்கல் -பி.காளியப்பன்

ஈரோடு - வெங்கு என்ற ஜி.மணிமாறன்

திருப்பூர்-எம்.எஸ்.எம்.ஆனந்தன்

நீலகிரி(தனி) - எம்.தியாகராஜன்

பொள்ளாச்சி-சி.மகேந்திரன்

நெல்லை-

பி.எச்.மனோஜ்பாண்டியன்

கரூர் - மு.தம்பிதுரை

பெரம்பலூர் - என்.ஆர்.சிவபதி

சிதம்பரம் (தனி) - பொ.சந்திரசேகர்

மயிலாடுதுறை - எஸ்.ஆசைமணி

நாகப்பட்டினம் (தனி) - தாழை ம.சரவணன்

மதுரை - வி.வி.ஆர்.ராஜ்சத்யன்

தேனி-ப.ரவீந்திரநாத்குமார்

திருநெல்வேலி - பி.எச்.மனோஜ் பாண்டியன்

இதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வெளியிட்டார்.

தொகுதி வாரியாக போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பெயர் விவரம் வருமாறு:-

வடசென்னை - டாக்டர் கலாநிதி வீராசாமி

தென் சென்னை- த.சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை- தயாநிதி மாறன்

ஸ்ரீபெரும்புதூர்-டி.ஆர்.பாலு

காஞ்சீபுரம் - ஜி.செல்வம்

எஸ்.ஜெகத்ரட்சகன்

அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன்

வேலூர் - டி.எம்.கதிர்ஆனந்த்

தர்மபுரி - டாக்டர் எஸ்.செந்தில்குமார்

திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை

கள்ளக்குறிச்சி -டாக்டர் தெ.கவுதம் சிகாமணி

சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன்

நீலகிரி - ஆ.ராசா

பொள்ளாச்சி - கு.சண்முகசுந்தரம்

திண்டுக்கல் - ப.வேலுச்சாமி

தூத்துக்குடியில் கனிமொழி போட்டி

கடலூர் - டி.ஆர்.பி.எஸ்.ஸ்ரீரமேஷ்

மயிலாடுதுறை - செ.ராமலிங்கம்

தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

தூத்துக்குடி- கனிமொழி

தென்காசி - தனுஷ்குமார்

திருநெல்வேலி - ஞானதிரவியம்

Next Story