அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றம்


அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றம்
x
தினத்தந்தி 15 April 2019 1:08 PM GMT (Updated: 15 April 2019 1:08 PM GMT)

அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு “பயோ மெட்ரிக்” வருகை பதிவு முறையை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது.  இதன்படி ஒவ்வொரு நாளும், 2 முறை இந்த கருவியில் வருகை பதிவேட்டை ஆசிரியர்களும், அலுவலர்களும் பதிவு செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனுவை இன்று விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.  பணி விதிகளை பின்பற்றியே ஆக வேண்டும் என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோரது சொத்துக்களை சரிபார்க்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story