உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மதுரை,
மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் -7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரை திருவிழாவின் 8 -ம் நாளான ஏப்ரல்-15 ம் தேதியன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. ஏப்ரல் 16 அன்று திக்விஜயம் நடைபெற்றது.
10 ம் நாள் திருவிழாவான இன்று மீனாட்சி - சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. காலை 9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்கும் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆகம விதிப்படி திருமண சடங்குகள் நடத்தப்பட்டு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வர் மணக்கோலத்தில் பிரியாவிடை அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story