அன்னிய செலாவணி மோசடி வழக்கு; சசிகலாவை மே 13ந்தேதி ஆஜர்படுத்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு


அன்னிய செலாவணி மோசடி வழக்கு; சசிகலாவை மே 13ந்தேதி ஆஜர்படுத்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 2 May 2019 5:37 PM IST (Updated: 2 May 2019 5:37 PM IST)
t-max-icont-min-icon

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை மே 13ந்தேதி ஆஜர்படுத்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில், சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் சாட்சி விசாரணை முடிந்து விட்டது.

இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை இந்த வழக்கிற்காக மே 13ந்தேதி ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் பற்றி சசிகலாவிடம் விளக்கம் கேட்கப்படும்.  இதேபோன்று நீதிபதியின் கேள்விக்கு பதிலளிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
1 More update

Next Story