ஓட்டு எண்ணிக்கை குறித்து சென்னையில் இன்று தேர்தல் துணை ஆணையர்கள் பயிற்சி 5 மாநில அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்


ஓட்டு எண்ணிக்கை குறித்து சென்னையில் இன்று தேர்தல் துணை ஆணையர்கள் பயிற்சி 5 மாநில அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்
x
தினத்தந்தி 14 May 2019 8:30 PM GMT (Updated: 14 May 2019 8:19 PM GMT)

ஓட்டு எண்ணிக்கை குறித்து சென்னையில் இன்று தேர்தல் துணை ஆணையர்கள் பயிற்சி 5 மாநில அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

சென்னை, 

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

தமிழ்நாடு, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு குறித்த பயிற்சி முகாம் சென்னையில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெறுகிறது.

இந்திய துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் கலந்துகொண்டு, வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கின்றனர்.

இப்பயிற்சி முகாமில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா மற்றும் மூன்று மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை துணை ஆணையர்கள் பார்வையிட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story