பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் -குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு
பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னை,
சென்னை கலைவாணர் அரங்கில் சர்வதேச உயிர்பன்மய தின விழா நடைபெற்றது. அதில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் பல மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தாலும் எல்லோருமே இந்தியர்கள், ஒரே நாடு. அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும், தாய்மொழியை வளர்க்க வேண்டும். இயற்கையையும், கலாச்சாரத்தையும் நேசிக்க வேண்டும். பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எதிர்கால தலைமுறையினர் ஊட்டச்சத்து மிக்கவர்களாக வளர, பாரம்பரிய உணவுப்பழக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story