பன்னிரெண்டாம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்பு


பன்னிரெண்டாம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய  குறிப்பு
x
தினத்தந்தி 29 May 2019 8:07 AM GMT (Updated: 29 May 2019 9:58 AM GMT)

தமிழகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய சிறு குறிப்பு இடம் பெற்றுள்ளது.

சென்னை

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் நோக்கில் நெல் கண்காட்சி நடத்திய நெல் ஜெயராமன் கடந்த வருடம் காலமானார். இந்நிலையில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்ததை நினைவு கூரும் வகையில், நெல் ஜெயராமன் பற்றிய குறிப்புகள் பிளஸ் 2  பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நெல் ஜெயராமன் குறிப்புகள் விவசாயிகள் மற்றும் மாணவர்களிடம் நல்ல வரவேற்பு பெறும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. 

ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டத்தின்படி கற்றல், கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆசிரியர்கள் மேற்கொள்ளவும், கருத்தாக்க பயிற்சியை மாவட்ட கருத்தாளர்களை கொண்டு ஆசிரியர்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

Next Story