தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் நடைமுறையில் இருக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் நடைமுறையில் இருக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
சென்னை,
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-
8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய முடிவை எடுப்பார். தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் நடைமுறையில் இருக்கும். இருமொழிக் கொள்கையை தான் தொடர முடியும் என மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார் என கூறினார்.
Related Tags :
Next Story