தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 3 Jun 2019 8:54 PM IST (Updated: 3 Jun 2019 8:54 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் தமிழக மாவட்டத்தில், ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Next Story