கோவையில் நடந்த சோதனை: முக்கிய நபரை கைது செய்து கொச்சி அழைத்துச் சென்றனர் - தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை


கோவையில் நடந்த சோதனை:  முக்கிய நபரை கைது செய்து கொச்சி அழைத்துச் சென்றனர் - தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2019 12:29 AM GMT (Updated: 13 Jun 2019 12:29 AM GMT)

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் நேற்று 7 இடங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் 6 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கோவை, 

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் அவர்களில் முக்கிய நபரான முகமது அசாருதீன் என்பவரை இரவில் கைது செய்து கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இன்று (வியாழக்கிழமை) அவரை தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

அவர் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற 5 பேருக்கும் கொச்சியில் உள்ள தனிக்கோர்ட்டில் இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருப்பதாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story