காஞ்சீபுரத்தில் சாலை விபத்து: ஒருவர் பலி; 5 பேர் காயம்


காஞ்சீபுரத்தில் சாலை விபத்து:  ஒருவர் பலி; 5 பேர் காயம்
x
தினத்தந்தி 7 July 2019 7:06 AM IST (Updated: 7 July 2019 7:06 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் தேன்பாக்கத்தில் நின்ற லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலியாகி உள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் தேன்பாக்கத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் முன்னே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில் ராஜ்குமார் என்பவர் பலியானார்.

சிவகங்கை மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளராக உள்ள நித்யானந்தம் உள்பட 5 பேர் விபத்தில் படுகாயம் அடைந்து உள்ளனர்.  அவர்கள் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story