மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய ஆம்பூர் மண்டபத்து சீலை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் முறையீடு
மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய ஆம்பூர் மண்டபத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் ஆகஸ்ட் 1ந்தேதி, அனுமதியின்றி தனியார் தோல்காலணி தொழிற்சாலையில் கூட்டம் நடத்தியதாகவும், அதேபோல் இஸ்லாமிய மூத்த நிர்வாகிகளுடன் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும் அந்த திருமண மண்டபத்திற்கு நேற்றைய தினம் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த், பரீதாபாபு, வி.எம். ஜக்ரியா உட்பட 4 பேர் மீது 171 எப், 171 சி, 188 இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய ஆம்பூர் மண்டபத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் இன்று மதியம் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story