7 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் இருவழி சாலையாக மாறும் அண்ணாசாலை


7 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் இருவழி சாலையாக மாறும் அண்ணாசாலை
x
தினத்தந்தி 2 Aug 2019 9:36 AM GMT (Updated: 2 Aug 2019 3:34 PM GMT)

மெட்ரோ ரெயில் பணிகளால் ஒருவழிச்சாலையாக்கப்பட்ட சென்னை அண்ணா சாலை 7 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் இருவழி சாலையாக மாறுகிறது.

சென்னை,

400 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்ததும், சென்னை போக்குவரத்தில் முக்கிய வழித்தடமாக அமைந்துள்ள அண்ணா சாலை, மெட்ரோ ரெயில் பணிகள் கடந்த 2012-இல்  நடைபெற்ற போது இருவழிச்சாலை,  ஒருவழிச்சாலையாக்கப்பட்டது. 13 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இச்சாலையில், உயர்மட்ட, சுரங்க வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் தற்போது பயணிக்கின்றது.

படிப்படியாக மெட்ரோ பணிகள் நிறைவடைந்த சாலைப்பகுதிகள், இருவழிச்சாலையாக்கப்பட்டு வரும் நிலையில், எல்ஐசி  முதல் ஆயிரம் விளக்கு இடையேயான உள்ள சாலை மட்டும் இருவழிப்பாதையாக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது இச்சாலையில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, நாளை முதல் இருவழிச்சாலையாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சாலையை பழைய நிலையிலேயே திருப்பி அளிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் உறுதியளித்திருந்த நிலையில், திசைகாட்டும் பதாகைகள், சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க போக்குவரத்து காவல்துறையினர் மெட்ரோ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். பணிகள் முடிவடையும் பட்சத்தில் நாளை அதிகாலை முதல் இருவழிச்சாலையாக பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

Next Story