தொடர் மழை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


தொடர் மழை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
x
தினத்தந்தி 8 Aug 2019 7:36 PM IST (Updated: 8 Aug 2019 7:36 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோவை, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் மழையில், கோவை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.   மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன.  தொடர் மழையின் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக  கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.  வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  அதேபோல், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story