மாநில செய்திகள்

சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, முதலீட்டாளர்களை சந்திக்கவே -அமைச்சர் உதயகுமார் + "||" + CM not going abroad for tourism, To meet investors Minister Udayakumar

சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, முதலீட்டாளர்களை சந்திக்கவே -அமைச்சர் உதயகுமார்

சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, முதலீட்டாளர்களை சந்திக்கவே -அமைச்சர் உதயகுமார்
சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உலக முதலீட்டாளர்களை சந்திக்கவே வெளிநாடு செல்கிறார் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.
சென்னை,

அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி கரையோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து அவ்வப்போது, பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து  வருகிறோம். தடுப்பணைகளின் நிலவரங்களையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் நிவாரணப் பணிகளில் அரசு எல்லா உதவிகளையும் செய்த பிறகு தான் திமுகவினர் களத்திற்கு வந்தனர். முதலமைச்சர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார். சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை. தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உலக முதலீட்டாளர்களை சந்திக்கவே வெளிநாடு செல்கிறார். அரசுக்கு நற்பெயர் வந்தவுடன் திமுகவினால் அதை ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. இது எதிர்க்கட்சி தலைவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என கூறினார்.