சென்னையில் 2வது நாளாக பெட்ரோல் ரூ.74.62க்கு விற்பனை


சென்னையில் 2வது நாளாக பெட்ரோல் ரூ.74.62க்கு விற்பனை
x
தினத்தந்தி 20 Aug 2019 1:54 AM GMT (Updated: 20 Aug 2019 1:54 AM GMT)

சென்னையில் 2வது நாளாக பெட்ரோல் ரூ.74.62க்கு விற்பனையாகி வருகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்று ரூ.74.62க்கும், டீசல் விலை ரூ.68.86க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 2வது நாளாக ரூ.74.62க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து ரூ.68.79க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story