தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது


தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
x
தினத்தந்தி 31 Aug 2019 5:43 PM GMT (Updated: 2019-08-31T23:13:36+05:30)

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது 5–ந்தேதி வழங்கப்படுகிறது.

புதுடெல்லி, 

பள்ளியின் கல்வித்தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் வாழ்க்கையை செழுமையாக்குதல், ஆசிரியப்பணியை கொண்டாடுதல் போன்ற நோக்கங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 2018–ம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த ஆசிரியர்களாக 46 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் டைமண்ட் ஜூப்லி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எம்.மன்சூர்அலி, கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆர்.செல்வகண்ணன் ஆகிய 2 பேர் இடம் பெற்று உள்ளனர். புதுச்சேரி வில்லியனூர் கூனிச்சம்பேட் பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் எஸ்.சசிகுமாரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்று இருக்கிறார்.

இவர்களுக்கு ஆசிரியர் தினமான வருகிற 5–ந்தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகிறது.

Next Story