திமுக நிகழ்ச்சிக்காக பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக்கூடாது: மு.க. ஸ்டாலின்


திமுக நிகழ்ச்சிக்காக பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக்கூடாது: மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 13 Sep 2019 7:08 AM GMT (Updated: 13 Sep 2019 7:08 AM GMT)

பேனர் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க மாட்டேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்ததில் சுபாஸ்ரீ என்ற பெண் நேற்று உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என முதலமைச்சர், கட்சியினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் . அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று  தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், திமுக நிகழ்ச்சிக்காக பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது என்று திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நிகழ்ச்சியோ, கூட்டமோ எதுவாக இருந்தலும் பேனர் வைத்தால் நான் வரமாட்டேன்.  அறிவுரையை தி.மு.க.வினர் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story