மாநில செய்திகள்

சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் + "||" + Kamal Haasan condoles with Subasree's family

சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்

சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்
பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை,

சென்னைப் பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து அரசியல் பிரமுகர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில்,   மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுபஸ்ரீயின் குடும்பத்தினரை  நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன்,  ” பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்களே அதனை ஒழிப்பார்கள். பேனர் கலாசாரத்தை ஒழிக்க மக்களுடன் மக்கள் நீதி மய்யமும் துணை நிற்கும்” இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த், கமல்ஹாசன் சேர்ந்து வந்தாலும் அ.தி.மு.க. ஒற்றையாக சமாளிக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ரஜினிகாந்த், கமல்ஹாசன் சேர்ந்து வந்தாலும் அ.தி.மு.க. ஒற்றையாக சமாளிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2. ‘தமிழகத்தின் மேம்பாட்டுக்காக நானும், ரஜினியும் பேசிக்கொண்டு இருக்கிறோம்’ - தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்டு கமல்ஹாசன் பேட்டி
தமிழகத்தின் மேம்பாட்டுக்காக தானும், ரஜினிகாந்தும் பேசிக்கொண்டு இருப்பதாகவும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்ட பின்னர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
3. இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து: கமல்ஹாசன்,ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
4. நீண்ட ஓய்வுக்கு பிறகு மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தனர்.
5. கெஜ்ரிவால் ஒரு சாதனையாளர் -கமல்ஹாசன் பாராட்டு
கெஜ்ரிவால் ஒரு சாதனையாளர் என நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.