கூட்ட நெரிசலை தவிர்க்க எர்ணாகுளம், நெல்லைக்கு சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


கூட்ட நெரிசலை தவிர்க்க எர்ணாகுளம், நெல்லைக்கு சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Sep 2019 9:30 PM GMT (Updated: 15 Sep 2019 8:31 PM GMT)

கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக எர்ணாகுளம், நெல்லைக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை

நெல்லை-தாம்பரம் (வண்டி எண்: 82602) இடையே வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி மதியம் 3 மணி, தாம்பரம்- நெல்லை (82615) இடையே வருகிற அக்டோபர் மாதம் 4-ந் தேதி, நவம்பர் மாதம் 1 மற்றும் 8-ந் தேதிகளில் காலை 10 மணி, சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-எர்ணாகுளம் (82631) இடையே வருகிற நவம்பர் மாதம் 8-ந் தேதி இரவு 8.10 மணி, எர்ணாகுளம்-எம்.ஜி.ஆர். சென்டிரல் (82632) இடையே வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதி இரவு 7 மணிக்கு, சுவிதா சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர்- நெல்லை (82601) இடையே அக்டோபர் மாதம் 4 மற்றும் 25-ந் தேதி, நவம்பர் மாதம் 1 மற்றும் 8-ந் தேதி மாலை 6.50 மணி, நெல்லை-தாம்பரம் (82602) இடையே அக்டோபர் மாதம் 7 மற்றும் 28-ந் தேதி, நவம்பர் மாதம் 3 மற்றும் 10-ந் தேதி மாலை 6.15 மணி, எழும்பூர்-நெல்லை (06001) இடையே அக்டோபர் 11, 18-ந் தேதி, நவம்பர் 15, 22, 29-ந் தேதி மாலை 6.50 மணி, நெல்லை-தாம்பரம் (06002) இடையே அக்டோபர் 20-ந் தேதி, நவம்பர் 17, 24-ந் தேதி மதியம் 3 மணிக்கு சுவிதா சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

நெல்லை-தாம்பரம் (06036) இடையே அக்டோபர் 3, 10, 17, 24, 31-ந் தேதி, நவம்பர் மாதம் 7, 14, 21, 28-ந் தேதி மாலை 5.45 மணி, தாம்பரம்-நெல்லை (06035) இடையே அக்டோபர் மாதம் 11, 18-ந் தேதி, நவம்பர் மாதம் 15, 22, 29-ந் தேதி மாலை 6 மணி, தாம்பரம்- நெல்லை (82615) இடையே அக்டோபர் 25-ந் தேதி மாலை 6 மணி, எம்.ஜி.ஆர்.சென்டிரல்-எர்ணாகுளம் (82631) இடையே அக்டோபர் 25-ந் தேதி இரவு 8.10 மணி, எர்ணாகுளம்-எம்.ஜி.ஆர்.சென்டிரல் (82632) இடையே அக்டோபர் மாதம் 28-ந் தேதி இரவு 7 மணி, எம்.ஜி.ஆர்.சென்டிரல்-எர்ணாகுளம் (06007) இடையே அக்டோபர் 11, 18-ந் தேதி மற்றும் நவம்பர் 1-ந் தேதி இரவு 8.10 மணி, எர்ணாகுளம்-எம்.ஜி.ஆர்.சென்டிரல் (06008) இடையே அக்டோபர் 13, 20-ந் தேதி, நவம்பர் 3-ந் தேதி இரவு 7 மணிக்கு சுவிதா சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர்.சென்டிரல்- கோவை (82617) இடையே அக்டோபர் 4-ந் தேதி இரவு 8.10 மணி, கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (82618) இடையே அக்டோபர் 8-ந் தேதி இரவு 9.15 மணிக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம்- வேளாங் கன்னி (06015) இடையே அக்டோபர் 5, 12, 19, 26-ந் தேதி, நவம்பர் 2, 9, 16, 23, 30-ந் தேதி காலை 11 மணி, வேளாங் கண்ணி-எர்ணாகுளம் (06016) இடையே அக்டோபர் 6, 13, 20, 27-ந் தேதி, நவம்பர் 3, 10, 17, 24-ந் தேதி மாலை 6.15 மணிக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story