சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை


சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
x
தினத்தந்தி 25 Sep 2019 1:19 AM GMT (Updated: 2019-09-25T06:49:53+05:30)

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், இன்று, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

இதேபோன்று மதுரை, தேனி உட்பட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  நடப்பு பருவத்தில் 15 விழுக்காடு கூடுதல் மழை பொழிவை தமிழகம் பெற்றுள்ளது என தெரிவித்திருந்தது.  அதிவேக காற்று வீச வாய்ப்பு இருப்பதால் குமரி கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் தென் தமிழக கரையோர பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது.

இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.  சென்னையில் கிண்டி, மாம்பலம், அசோக்நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி, எழும்பூர், வேப்பேரி, அரும்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதேபோன்று வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, அண்ணாசாலை, கே.கே. நகர், ராமாபுரம், போரூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

Next Story