அப்துல்கலாம் பிறந்தநாள் : டுவிட்டரில் டிரெண்டிங் செய்யும் விவேக்


அப்துல்கலாம் பிறந்தநாள் : டுவிட்டரில் டிரெண்டிங் செய்யும் விவேக்
x
தினத்தந்தி 14 Oct 2019 12:14 PM GMT (Updated: 14 Oct 2019 12:14 PM GMT)

நாளை அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விவேக் டுவிட்டரில் மரம் நடுவது தொடர்பான ஹேஸ்டேக்கை டிரெண்டிங் செய்துள்ளார்.

சென்னை,

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் பிறந்த நாள் விழா நாளை நாடெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி, மரம் வளர்ப்பு தொடர்பாக  நடிகர் விவேக் சமூக  வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மரம் நடுவதை வழக்கமாக கொண்டுள்ள விவேக், தற்போது #PLANTFORKALAM என்ற ஹேஸ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டிங் செய்துள்ளார்.

அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

நாளை அக்டோபர் 15-ஆம் நாள், பாரத ரத்னா கலாம் ஐயா பிறந்த நாளை ஒட்டி அனைத்து தலைவர்/தளபதி/தல (நாம் அன்புடன் வைத்த செல்லப் பெயர்கள்) ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதை சமூக தளங்களில் பதிவு செய்து டிரெண்டிங் செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Next Story