பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- முதல்வர் பழனிசாமி


பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த பொதுமக்களும்  ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 22 Oct 2019 4:13 PM GMT (Updated: 22 Oct 2019 4:13 PM GMT)

பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:- அனைத்து ஏரி, ஆறுகளையும் சுத்தம் செய்வதற்கான தொகையும், அதிகாரிகளும் நம்மிடம் கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதை செய்து வருகிறோம். நீர் மேலாண்மை திட்டம் இன்றியமையாத ஒன்று, மற்ற மாநிலங்களில் இருந்து நமக்கு கொடுக்கப்படும் உபரி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும். 

 பிளாஸ்டிக் பொருட்களின்  உபயோகத்தையும், நீர் நிலைகளில் போடுவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.  பிளாஸ்டிக்கை அரசு மட்டும் கட்டுப்படுத்த முடியாது, பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்கள் வீட்டை சுற்றியுள்ள பகுதியில் தேங்கும் நீரை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார். 

Next Story