மாநில செய்திகள்

குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள்- கவிஞர் வைரமுத்து டுவிட் + "||" + No time to complain Rescue is important says vairamuthu

குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள்- கவிஞர் வைரமுத்து டுவிட்

குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள்- கவிஞர் வைரமுத்து டுவிட்
அரசு எந்திரத்தையோ, ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை, குழந்தை மீட்பே குறிக்கோள் என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. குழந்தையை மீட்கும் பணிகள் அன்று மாலை முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால் இதுவரையிலும் குழந்தையை மீட்க முடியவில்லை.  மீட்புக்குழுவினர், குழந்தையை  மீட்கும் பணியில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 62 மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் பணிகள் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ அரசு எந்திரத்தையோ ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள். பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்.”என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதற்காக சமூக இடைவெளியை மறந்து குவிந்த ஒப்பந்ததாரர்கள் போலீசார் எச்சரிக்கை
திருச்சி வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதற்காக சமூக இடைவெளியை மறந்து ஒப்பந்ததாரர்கள் குவிந்தனர். அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
2. சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு தற்கொலை - கவிஞர் வைரமுத்து
சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு தற்கொலை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
3. திருச்சி விமானநிலையம் அருகே அரசு அதிகாரி ஓட்டி வந்த கார் குடிசைக்குள் புகுந்ததால் பரபரப்பு
திருச்சி விமான நிலையம் அருகே அரசு அதிகாரி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து குடிசைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் - கவிஞர் வைரமுத்து டுவீட்
தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
5. அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறியவர் அப்துல் கலாம் - கவிஞர் வைரமுத்து
அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறியவர் அப்துல் கலாம் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.