‘ரஜினிகாந்துக்கு எந்த விருது கொடுத்தாலும் காங்கிரஸ் வரவேற்கும்’ கே.எஸ்.அழகிரி பேட்டி


‘ரஜினிகாந்துக்கு எந்த விருது கொடுத்தாலும் காங்கிரஸ் வரவேற்கும்’ கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 2 Nov 2019 11:34 PM GMT (Updated: 2 Nov 2019 11:34 PM GMT)

ரஜினிகாந்துக்கு எந்த விருது கொடுத்தாலும் தமிழக காங்கிரஸ் வரவேற்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். தமிழக அரசு புதிய கல்வி கொள்கை என்ற வார்த்தையை வைத்து தொழிலாளிகளின் பிள்ளைகள் படிப்பதை தடுக்க நினைக்கிறது. கூலி தொழிலாளியின் பிள்ளைக்கு 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்திவிட்டு, நீட் என்ற தேர்வை வைத்தால் மீண்டும் குலத்தொழிலை தான் செய்ய வேண்டும். மாணவர்களை பாதிக்கும் பொதுத்தேர்வை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தினால் எங்கள் உயிரை கொடுத்தாவது தடுப்போம். நீட் தேர்வை காங்கிரஸ், தி.மு.க. தான் கொண்டு வந்ததாக கூறும் அமைச்சர் ஜெயக்குமார் அதை நீக்க வேண்டியது தானே.

டாக்டர்கள் போராட்டத்தை நடத்தினாலும் மருத்துவமனைகளை செயல்பட வைத்தனர். ஜனநாயகத்தில் போராடுகிற உரிமையை ஒடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. துணை முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் வெளிநாட்டு பயணத்திற்கு வாழ்த்துகள்.

ரஜினிகாந்துக்கு எந்த விருது கொடுத்தாலும் தமிழக காங்கிரஸ் வரவேற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story