மேலும் ஒரு திருவள்ளுவர் சிலை அவமதிப்பு ; பாஜகவினர் சுத்தம் செய்து பூஜை செய்தனர்


மேலும் ஒரு திருவள்ளுவர் சிலை அவமதிப்பு ; பாஜகவினர் சுத்தம் செய்து பூஜை செய்தனர்
x
தினத்தந்தி 7 Nov 2019 7:34 AM GMT (Updated: 7 Nov 2019 7:34 AM GMT)

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மேலும் ஒரு திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. பாஜகவினர் சுத்தம் செய்து பூஜை செய்தனர்.

சென்னை

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் தென்னிந்திய வள்ளுவர் குல சங்கம், திருவள்ளுவர் தெருவாசிகள் சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது.

கடந்த 6-ந் தேதி இந்த திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் அவமதித்தனர். திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சினை முடிவதற்குள் தேனி மாவட்டம் பெரியகுளத்திலும் ஒரு திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டம்  பெரியகுளத்தில் திருவள்ளுவர் சிலை மீது ஒருவர் மர்ம பொருளை வீசிச் சென்றார். அந்த சிலையை பாஜகவினர் நீர் ஊற்றி சுத்தம் செய்தனர். பின்னர் பால் ஊற்றி பூஜை செய்தனர்.  பாஜகவைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவர் கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.

Next Story