உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட நவ.16-ந் தேதி முதல் விருப்பமனு


உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட நவ.16-ந் தேதி முதல் விருப்பமனு
x
தினத்தந்தி 12 Nov 2019 5:44 PM GMT (Updated: 12 Nov 2019 5:44 PM GMT)

உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட நவம்பர் 16-ந் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ஜனதாவினர், வரும் 16ந் தேதி முதல், விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பா.ஜனதா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோர்கள் விருப்ப மனுக்களை, www.bjptn.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்ப மனுக்களை நவம்பர் 16ந் தேதி முதல் மாவட்ட அலுவலகத்தில் சமர்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி மேயர் - ரூ.10,000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.2500, நகராட்சி தலைவர் - ரூ.5000, பேரூராட்சி தலைவர் - ரூ.2500, பேரூராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.500. கட்டணமாக செலுத்த வேண்டும்” இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக உள்ளாட்சித் தேர்தல் மற்றும், அக்கட்சியின் அமைப்பு தேர்தலுக்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, பா.ஜனதா தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன், நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியே, உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என கூறினார்.


Next Story