காஞ்சீபுரம் மற்றும் திருவண்ணாமலையில் கனமழை
காஞ்சீபுரம் மற்றும் திருவண்ணாமலையில் இன்று காலை கனமழை பெய்தது.
காஞ்சீபுரம்,
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை நகர் மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்தது. எனினும், சென்னையில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோன்று காஞ்சீபுரம் மற்றும் திருவண்ணாமலையில் அதிகாலையில் கனமழை பெய்தது.
இதில், காஞ்சீபுரத்தில் மாமல்லபுரம், செவிலிமேடு, பூக்கடை, ஓரிக்கை, சத்திரம் மற்றும் வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலையில் வந்தவாசி, மிருதூர், பாதிரி, மருதாடு, செம்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
தொடர்ந்து கடலூர், நாகை, தஞ்சை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இன்று மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story