சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை


சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
x
தினத்தந்தி 30 Nov 2019 1:41 AM GMT (Updated: 30 Nov 2019 1:41 AM GMT)

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்து இருந்தது. 

சென்னையில் இன்று காலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், கிண்டி, வேளேச்சேரி, வடபழனி, கோயம்பேடு, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.


Next Story