டாக்டர்கள் பணியிட மாற்றம் குளறுபடிகளை நீக்க வேண்டும்; தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


டாக்டர்கள் பணியிட மாற்றம் குளறுபடிகளை நீக்க வேண்டும்; தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Nov 2019 11:17 PM GMT (Updated: 30 Nov 2019 11:17 PM GMT)

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி செய்யப்பட்ட சிறப்பு டாக்டர்கள் பணியிட மாற்றத்தில் நிகழ்ந்துள்ள குளறுபடிகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. சிறப்பு டாக்டர்களை அவரவர் துறைகளில் நியமித்து குளறுபடிகளை சரி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுநீரகவியல் துறை பேராசிரியரை இதயநோய் துறையிலும், முடநீக்கியல் துறை பேராசிரியரை குழந்தைகள் மருத்துவ பிரிவிலும், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு டாக்டரை நரம்பியல் துறையிலும் இடமாற்றம் செய்வதால் யாருக்கு என்ன பயன்? டாக்டர்கள் இடமாற்றம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story