மக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின் பேட்டி
மக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது.தேர்தலை கண்டு நாங்கள் ஓடி ஒளியவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை. நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை. மக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது.
தற்போதாவது உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு முறையாக வராத நிலையில் பல தகவல்கள் பரப்பப்படுகின்றன.
உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சம்மட்டி அடி என்றால் அதிமுகவுக்கு அது மரண அடி. நள்ளிரவு வரை இருந்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக எம்.பிக்கள் வாக்கு செலுத்தினர். குடியுரிமை மசோதாவை ஆதரித்து தமிழர்களுக்கு அதிமுக ஆட்சி துரோகம் செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story