எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர் அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன - அமைச்சர் செல்லூர் ராஜு


எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர் அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன - அமைச்சர் செல்லூர் ராஜு
x
தினத்தந்தி 13 Dec 2019 7:49 AM GMT (Updated: 2019-12-13T14:47:23+05:30)

எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர் என்றும் அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரை,

அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், அதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், “எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர். அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன” என்று அவர் கூறினார்.

எகிப்து வெங்காயம் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அதை தானும் சாப்பிட்டுப் பார்த்ததாகவும் அதில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகம் இருப்பதால் அது இதயத்திற்கு நல்லது என்று அமைச்சர் செல்லூர் ராராஜு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story