அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர்; திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை -மு.க.அழகிரி வேதனை


அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர்; திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை -மு.க.அழகிரி வேதனை
x
தினத்தந்தி 30 Jan 2020 7:29 AM GMT (Updated: 2020-01-30T12:59:03+05:30)

அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர் ஆனால் திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரையில் மு.க.அழகிரி தனது பிறந்த நாளை தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

நானும் கவிஞர் பிள்ளைதான். என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும். மறப்பது என்பது இப்போது சாதாரணமாகி விட்டது. அதற்கு நான்தான் உதாரணம்.

அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர். பழகிய திமுகவினர் என்னை கண்டு கொள்வது இல்லை. இந்த நிலை எப்போது மாறும் என்று எனக்கு தெரியும் என கூறினார்.

Next Story