மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கு; 12-ந்தேதி விசாரணை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Group-1 exam abuse case

குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கு; 12-ந்தேதி விசாரணை ஐகோர்ட்டு உத்தரவு

குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கு; 12-ந்தேதி விசாரணை ஐகோர்ட்டு உத்தரவு
குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கு; 12-ந்தேதி விசாரணை ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் நடந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் முன்பு வக்கீல் எம்.புருஷோத்தமன் ஆஜராகி, ‘டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது என்று கடந்த 2017-ம் ஆண்டே இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, டி.என்.பி.எஸ்.சி.யில் இருந்து 64 விடைத்தாள்கள் திருடப்பட்டுள்ளன என்று போலீஸ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரவேண்டியது. ஆனால், இதுவரை விசாரணைக்கு வரவில்லை. எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். தற்போது டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்த பலரை போலீசார் கைது செய்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்த கூடுதல் தகவலை இந்த ஐகோர்ட்டுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்’ என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை வருகிற (பிப்ரவரி) 12-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறினர்.