குரூப் 4 தேர்வு முறைகேடு- மேலும் 2 பேர் கைது


குரூப் 4 தேர்வு முறைகேடு- மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2020 1:50 PM GMT (Updated: 31 Jan 2020 1:55 PM GMT)

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்–4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் தவறுகள் கண்டறியப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டு குறுக்கு வழியில் தேர்வான 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதுவதற்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி  குரூப்- 4 தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி,  இந்த முறைகேட்டில் தொடர்புடைய டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம் காந்தன், பள்ளி கல்வித்துறை ஊழியர், இடைத்தரகர்கள், தேர்வர்கள் என இதுவரையில் 14 பேரை கைது செய்துள்ளது. 

இந்நிலையில், குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் தொடர்புடைய டிஎன்பிஎஸ்சி தட்டச்சர் மாணிக்கவேல், கூரியர் நிறுவன ஊழியர் கல்யாணசுந்தரம் ஆகிய 2 பேரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.  குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 


Next Story