பட்டாம் பூச்சிகளின் சிறகிலிருந்து பாறாங்கற்களை அகற்றியதற்குப் பாராட்டுக்கள்- கவிஞர் வைரமுத்து


பட்டாம் பூச்சிகளின் சிறகிலிருந்து  பாறாங்கற்களை அகற்றியதற்குப் பாராட்டுக்கள்- கவிஞர் வைரமுத்து
x
தினத்தந்தி 5 Feb 2020 7:46 AM GMT (Updated: 5 Feb 2020 7:46 AM GMT)

பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு:பட்டாம் பூச்சிகளின் சிறகிலிருந்து பாறாங்கற்களை அகற்றியதற்குப் பாராட்டுக்கள் என கவிஞர் வைரமுத்து கூறி உள்ளார்.

சென்னை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில்,  மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும், 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு என  தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டினார்கள்.

இந்நிலையில், 5 ஆம் வகுப்பு  மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு அரசாணையை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அறிவித்தார்.  மேலும் ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் தற்போது இதற்கு பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்று வந்த நிலையில் தற்போது கவிஞர் வைரமுத்து இது குறித்து டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பிஞ்சுப் பிள்ளைகளின் பொதுத்தேர்வுகளை 
நீக்கிய அரசுக்கு நீக்கமற நன்றி. பட்டாம்பூச்சிகளின் சிறகிலிருந்து  பாறாங்கற்களை அகற்றியதற்குப் பாராட்டுக்கள் என தெரிவித்து உள்ளார்.

Next Story