ஒப்பந்த லாரிகள் வேலை நிறுத்தம்: பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைக்க நடவடிக்கை - பால்வளத்துறை ஆணையர் தகவல்


ஒப்பந்த லாரிகள் வேலை நிறுத்தம்: பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைக்க நடவடிக்கை - பால்வளத்துறை ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2020 2:34 AM GMT (Updated: 16 Feb 2020 2:34 AM GMT)

ஒப்பந்ததாரர்கள் வேலை நிறுத்தத்தால் எந்தவித பாதிப்பும் இன்றி தங்கு தடையில்லாமல் தேவையான பால் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என பால்வளத்துறை ஆணையர் கூறினார்.

சென்னை,

ஆவின் பால் நிறுவனம் முடிவடைந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்காததை கண்டித்து டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பால்வளத்துறை ஆணையரும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைய நிர்வாக இயக்குனருமான மா.வள்ளலார் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குனர் தலைமையில் அனைத்து அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை பெருநகருக்கு தங்கு தடையின்றி பால் கொண்டு வருவதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சென்னை பெருநகர பால் பண்ணைகளுக்கு தேவையான பாலினை பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் பால் டேங்கர்கள் மூலம் கொண்டுவர மாவட்ட துணை பதிவாளர்கள் மற்றும் பொது மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இதுகுறித்து மா.வள்ளலார் கூறும்போது, “ஆவின் பால் டேங்கர் ஒப்பந்ததாரர்கள் வேலை நிறுத்தத்தால் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோருக்கு எந்தவித பாதிப்பும் இன்றி தங்கு தடையில்லாமல் தேவையான பால் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

Next Story