குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற திமுக கோரிக்கை - சபாநாயகர் மறுப்பு


சபாநாயகர் தனபால் : கோப்புப் படம்
x
சபாநாயகர் தனபால் : கோப்புப் படம்
தினத்தந்தி 17 Feb 2020 6:26 AM GMT (Updated: 17 Feb 2020 8:17 AM GMT)

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரவையில் விவாதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

சென்னை

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர்  மு.க.ஸ்டாலின்  வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவத்தை  சுட்டிக்காட்டி பேசியதாவது:-

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். வண்ணாரப்பேட்டை  அமைதியான போராட்டத்தில் தடியடி நடத்த தூண்டியது யார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என கூறினார்.

இதற்கு பதில் அளித்த சபாநாயகர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு   எதிராக பேரவையில் விவாதிக்க முடியாது. ஏற்கனவே நிராகரித்த கோரிக்கையை மீண்டும் அவையில் கொண்டுவர முடியாது. எதிர்க்கடசி தலைவர் ஸ்டாலின்  கோரிக்கை பேரவையில் ஏற்கப்படவில்லை  திமுக கொடுத்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. திமுக கடிதத்தை ஏற்பது குறித்தும்  நிராகரிப்பது குறித்தும்  முடிவெடுக்க சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது.தீர்மானம் தொடர்பாக என்னை நிர்பந்திக்க கூடாது என கூறினார்.

Next Story