கோவையில் ருசிகரம்: மனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் சுவீடன் தொழிலதிபர்!


கோவையில் ருசிகரம்: மனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் சுவீடன் தொழிலதிபர்!
x
தினத்தந்தி 18 Feb 2020 11:43 AM GMT (Updated: 18 Feb 2020 11:43 AM GMT)

மன நிம்மதிக்காக வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவர், கோவையில் பொதுமக்களிடம் பிச்சை கேட்டு சுற்றித்திரிவது அவ்வூர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை,

சுவீடன் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரான கிம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோவையிலுள்ள ஈஷா யோகா தியான மையத்திற்கு வந்துள்ளார். அங்கு ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்துள்ளார்.

ஆனாலும் மனநிம்மதி கிடைக்காததால், பொதுமக்களிடம் இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்து அவர்களிடம் யாசகம் கேட்டு பெற்று வருகிறார். ரெயில் நிலையத்திற்கு வரும், பொதுமக்களுக்கு வணக்கம் வைத்து, அவர்கள் கொடுக்கும் ஐந்து, பத்து ரூபாய் பணம் பெற்று, அதில் உணவு வாங்கி உண்கிறார். இதன் மூலம் மன நிம்மதி கிடைப்பதாக கிம் தெரிவித்துள்ளார்.

கோவையில் வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவர் பொதுமக்களிடம் பிச்சை கேட்டு சுற்றித்திரிவது அவ்வூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.


Next Story