மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் - கி.வீரமணி வேண்டுகோள்


மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் - கி.வீரமணி வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 Feb 2020 8:45 PM GMT (Updated: 18 Feb 2020 5:25 PM GMT)

மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

முற்போக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றி இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கேரளாவில் ஆட்சி நடைபெற்று வருகிறது. மூடநம்பிக்கைக்கு எதிரான சட்ட முன் வரைவை உருவாக்க கேரள அரசின் சட்டத்துறை வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வல்லுனர் குழுவின் அறிக்கை உள்துறையிடம் வழங்கப்பட்டு, விரைவில் சட்டமாக நிறைவேற்றப்பட இருக்கிறது. இது வரவேற்கத்தக்கதாகும். ஏற்கனவே கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலத்தில் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மறைந்த கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, சமூக சீர்திருத்த குழு ஒன்றை அமைத்திருந்தார். அதன் விரிவாக்கமாக தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரவேண்டியது மிகவும் அவசியமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story