பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததால் திமுக வெளிநடப்பு


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததால் திமுக வெளிநடப்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 10:01 AM GMT (Updated: 2020-02-20T15:31:21+05:30)

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை

பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். ஒரு மனதாக சட்ட முன் வடிவை நிறைவேற்றித்தர முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது 

காவிரி டெல்டா வேளாண் மண்டலத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். தேர்வுக் குழுவுக்கு அனுப்பினால் முழு வெற்றியை பெறும்நடைமுறையில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் . வேளாண் மண்டலங்களில் திருச்சி, கரூர், அரியலூர் விடுபட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி

திருச்சி தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால் அதை பாதுகாப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் கொண்டுவரவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டமுன்வடிவில் முதலில் புதிய திட்டங்களை தடுப்பது தான் நோக்கம். பழைய திட்ட விவகாரங்களை எடுத்தால் பல குழப்பங்கள் வரும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.   சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கேட்டு மத்திய அமைச்சரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக அரசு வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது  என கூறினார்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

விவசாயிகள் அரசு என்பதன் அடிப்படையில் இந்த சட்டமுன்வடிவை கொண்டு வந்திருக்கிறோம். இதனை கூட அரசியலாக்கி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது வருத்தமளிக்கிறது; திமுக ஆதரவளிக்காவிட்டாலும் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட முன்வடிவை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். சட்டத்தை நிறைவேற்றுவதில் இடையூறுகள், சிக்கல்கள் உள்ளன; விவசாயிகள் மற்றும் சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோகிக்க வேண்டும்!" என மு.க.ஸ்டாலின் கூறினார்.

Next Story