ரசாயன முதலீட்டு மண்டல ஆணை ரத்து: ம.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி - வைகோ அறிக்கை


ரசாயன முதலீட்டு மண்டல ஆணை ரத்து: ம.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி - வைகோ அறிக்கை
x
தினத்தந்தி 23 Feb 2020 11:45 PM GMT (Updated: 23 Feb 2020 11:43 PM GMT)

ரசாயன முதலீட்டு மண்டலம் அமைய வெளியிட்ட குறிப்பாணையை தமிழக அரசு ரத்து செய்திருப்பது ம.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி தமிழக அரசு குறிப்பாணை வெளியிட்டது. அதில் கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் உள்ள 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. விளைநிலங்கள் பாதிக்கக்கூடாது என்ற வகையில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்கும் குறிப்பாணையைத் திரும்பப்பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

இந்தநிலையில் கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைய வெளியிட்ட குறிப்பாணையை தமிழக அரசு ரத்து செய்திருப்பது ம.தி.மு.க. தொடர்ந்து குரல் எழுப்பியதற்கு கிடைத்த வெற்றி ஆகும். காவிரிப் படுகை மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்க வேண்டுமானால் 2018-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுடன் ஹைட்ரோ கார்பன் எடுக்க போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story