செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறப்பு: ‘தினத்தந்தி’ செய்தி அடிப்படையில் மனித உரிமை ஆணையம் வழக்கு


செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறப்பு: ‘தினத்தந்தி’ செய்தி அடிப்படையில் மனித உரிமை ஆணையம் வழக்கு
x
தினத்தந்தி 9 March 2020 9:30 PM GMT (Updated: 9 March 2020 9:07 PM GMT)

செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது குறித்து தினத்தந்தியில் வெளியான செய்தியின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை, 

சென்னை அடுத்த பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக நஷ்ரின் என்ற இளம் பெண் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவ வலி வந்தபோது, பிரசவம் பார்க்க அங்கு டாக்டர் இல்லை. அங்கிருந்த செவிலியர் பிரசவம் பார்த்துள்ளார். இதனால், குழந்தை இறந்தே பிறந்துள்ளது.

இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் பொறுப்பு தலைவர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

பின்னர், இந்த வழக்கிற்கு தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்கள் தடுப்புத்துறை இயக்குனர், திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறையின் இணை இயக்குனர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Next Story